என்றோ ஒரு நாளின் மகிழ் மாலைப்பொழுதினிலோ
இருள் சூழ்ந்த இரவினிலோ
ஏதோ ஒரு வகையில்
அறிமுகமாகியிருக்கலாம்.
சந்தோஷத் துளிகளின் சாகரமாகவும்
துக்கங்களின் வடிகாலாகவும் இருந்திருக்கலாம்.
ஒரு நேரம் தோழமை
மறு நேரம் காதலில்லா காதல்
ஒரு நேரம் அதீத அன்பு
மறு நேரம் தீரா வெறுப்பு
என்று புரட்டிப் போட்டிருக்கலாம்.
உயிர்வரை ஊடுருவும் நேசமாய்
பெரும் நம்பிக்கையாய்
துவளும் பொழுதுகளில் ஆறுதலாய்
புலம்பல்களின் குப்பைத் தொட்டியாய்
இருந்திருக்கலாம்.
எல்லாவற்றுக்கும் உச்சமாய்
உள்ளத்தில் உறங்கும் காமத்தை உசுப்பும் காரணியாய்
அதன்பொருட்டே அதை வெறுக்கும் காரணியாய் இருந்திருக்கலாம்.
இந்த உறவு தொடர்வது சாத்தியமில்லை என்று உணரும் தருணங்களில் மனம்நொறுங்கிப் போயிருக்கலாம்.
இன்னது என்று பெயரிட்டுச் சொல்ல இயலாத இப்படியான புதிரான உறவுகள்
சில நேரங்களில்
நெஞ்சை வருடும் பனிநீர் பூக்கள்
பல நேரங்களில்
நெஞ்சை நெருடும் நெருஞ்சி முட்கள்.
ஒரு தெருவில் உத்தேசமாக நகரும் மனிதத் தலைகளில் அவனுக்கு ஒரு அவளோ
அவளுக்கு ஒரு அவனோ
மூளையின் ஏதோ ஒரு மூலையில் நிரந்தரமாய் இருக்கக்கூடும்!