Monday, 4 September 2017

இருத்தலியம் அவ்வளவு எளிதல்ல

தாயின் முலையில் பால் அருந்தும்
அந்த முதல் தருணம் அறிமுகமாகிறது
பெண் தேகத்தின் வாசனை
காமத்தின் வாசனை
ஒரு ஆணுக்கு.

பதின்மம் தொடங்கி இறப்பு வரை
பெண்ணுக்கே புரியாத புதிராக விளங்கும்
அவள் உடல் சார்ந்த அதிசயங்கள்
ஒரு ஆணுக்கு எப்படி விளங்கும் ?

சிறு வயது முதல் பெண் சார்ந்த எந்த விடயத்தையும்
தெளிவு படுத்தாமல் பூடகமாகவே வைத்திருக்கும் இச்சமூகம்
பாழாய்ப்போன ஆணிடம் என்ன மாதிரியான நேர்மையை
எதிர்பார்க்க முடியும் தோழிகளே ?

பெண் உடல் மீதான ஈர்ப்பும் கற்பனையும் உண்டாக்கும் மனஉளைச்சலால்
ஆயிரமாயிரம் அரூபப் பெண்களின் கொங்கைகளில் முகம் புதைத்து
சும்பனமிட்டு யோனிகளில் ஆண்குறி நுழைத்து கரமைத்துனம் செய்யும் ஆணிடம்
என்ன மாதிரியான நேர்மையை எதிர்பார்க்கிறீர்கள் தோழிகளே ?

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை  அத்தனை சிக்கலானது !
மனமின்றி உடல் சார்ந்தே பொருந்தும்  ஒரு வெங்காயக் கொள்கை  !
எந்தப் பெண்ணையும் நோக்கா ஒரு ஆண்
ஒரே ஒரு பெண் மீது எப்படி காதல் கொள்ள முடியும் ?
காமம் கொள்ள முடியும் ?
கலவி கொள்ள முடியும் ?
எப்பேர்ப்பட்ட  நகைமுரண் இது!
தாயாய்ப்  பார்
தமக்கையாய்ப் பார்
தங்கையாய்ப் பார்
என்றெல்லாம் ஆணைக் குற்றஉணர்வுக்கு ஆளாக்கி
அவனைக் குன்றிப் போகச்செய்வது சரியா ?

எந்தச் சமூகம் புனிதமென்ற  இல்லாத சொல் கொண்டு பெண்ணை
சட்டகத்துள் அடைக்க முயன்றதோ அவர்களின் உணர்வுகளை அடக்கப் பழக்கியதோ
அதே சமூகம் ஆணுக்கு அதை உடைக்க அனுமதித்து அவனை நிர்வாணமாக்கிக்  கேள்வி கேட்கிறது!
சொல்லுங்கள் தோழிகளே
ஒரு ஆண்
எப்படி காமம் தவிர்ப்பது ?
கண்ணியம் காப்பது ?

கலாச்சாரக்  களியாட்டங்களுக்குக்  கட்டுண்டு
உணர்ச்சிகளைப் பொசுக்க முயன்று தோற்று சிக்கிச்  சின்னாபின்னமாகும்
இரு பாலரும் என்னதான் செய்வது ?
பதின்ம வயதில் ஏற்படும் ஆர்வம் அழகாவதும் அவலமாவதும் யார் கையில் ?
இதற்கெல்லாம் தோற்றுவாய் தான் என்ன ?

அதீதமான கொடூர சம்பவங்கள் அரங்கேறிய பின்
பாலினக் கல்வி வேண்டும் வேண்டும் என்று
உலகமே கதறுகிறது இன்று
ஆனால்
அதே சட்டகத்துக்குள் நின்று கொண்டு !



சொல்லுங்கள் தோழிகளே
அறியாமல்தான் கேட்கிறேன் 
ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என
எதிர்பார்க்கிறீர்கள்?

ஆனால் ஒன்று நிதர்சனம்
ஆணாயினும் பெண்ணாயினும் 
இச்சமூகத்தில் இருத்தலியம் அவ்வளவு எளிதல்ல !