Sunday, 18 February 2018

நியாயப்படுத்துதல்

பெற்றோர்கள் பிள்ளைகளிடமும் பிள்ளைகள் பெற்றோரிடமும்
கணவன் மனைவியிடமும்
மனைவி கணவனிடமும்
காதலன் காதலியிடமும்
காதலி காதலனிடமும்
இன்னபிற இரத்த சொந்தங்களும்
நட்புகளும் புதுமுகங்களும்
இனி வரப்போகும் மனித உறவுகளின் அத்தனை வடிவங்களும் என  ஒவ்வொருவரும் தன்னை, தன் நிலைத்தன்மையை எதற்கென்றே தெரியாமல் நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் ஏதோ ஒரு வகையில்.
ஆம், இந்த உலகில் நியாயப்படுத்துதல் அவசியமாகிறது.

Tuesday, 6 February 2018

ஆசை

தவறுகளுக்கும்  குற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆசை
தன்னம்பிக்கையுடன் செயல்பட ஆசை
அன்பில் நீந்த ஆசை
மூளையை அடித்துத் துவைத்துச் சரிசெய்ய ஆசை
மழலையின் மனநிலையை மட்டுமே கொண்டிருக்க ஆசை
நட்பு சூழ் உலகில் உலவ ஆசை
ஏகாங்கியாய் உலகைச் சுற்றி வர ஆசை
இப்படி எண்ணற்ற ஆசைகளுக்கும் மேலாய்
இத்தனை ஆசைகளுக்குள்ளும் அடைபடாமல் 
இதுகாறும் என்னைக் கொடியாய்ச் சுற்றியிருக்கும்
எதையெல்லாம் தவறெனச் சிறுவயதில் மனதில் விதைத்ததோ
அதையெல்லாம் வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளில் சரியென தர்க்கம் பேசிக் குழப்பி அதற்குப் பழக்கப்படுத்தும்
செறிவற்ற சிடுக்குகள் நிறைந்த இந்தச் சமூக அமைப்பில்
தெரிந்தே விழ பேராசை!