தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆசை
தன்னம்பிக்கையுடன் செயல்பட ஆசை
அன்பில் நீந்த ஆசை
மூளையை அடித்துத் துவைத்துச் சரிசெய்ய ஆசை
மழலையின் மனநிலையை மட்டுமே கொண்டிருக்க ஆசை
நட்பு சூழ் உலகில் உலவ ஆசை
ஏகாங்கியாய் உலகைச் சுற்றி வர ஆசை
இப்படி எண்ணற்ற ஆசைகளுக்கும் மேலாய்
இத்தனை ஆசைகளுக்குள்ளும் அடைபடாமல்
இதுகாறும் என்னைக் கொடியாய்ச் சுற்றியிருக்கும்
எதையெல்லாம் தவறெனச் சிறுவயதில் மனதில் விதைத்ததோ
அதையெல்லாம் வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளில் சரியென தர்க்கம் பேசிக் குழப்பி அதற்குப் பழக்கப்படுத்தும்
செறிவற்ற சிடுக்குகள் நிறைந்த இந்தச் சமூக அமைப்பில்
தெரிந்தே விழ பேராசை!

No comments:
Post a Comment