பொதுவாக சில திரைப்படங்கள் நாம் செய்ய வேண்டியதை,மறந்ததை,இந்த பூமியில் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை,சட்டென உணர்த்திவிட்டுச் செல்லும். நாம் ஏற்கனவே அறிந்த ஒரு தகவலை சுவாரஸ்யம் சேர்த்து சொல்லும்போது மனதில் இன்னும் ஆழமாக பதியுமல்லவா? அதுதான் சினிமாவின் ஸ்பெஷல். பிறர் சொல்லி புரியாததை,பல பக்கங்கள் படித்துத் தெளியாததை,காட்சிகளாகக் கண்களுக்கு கொடுத்து உள்ளத்தில் ஊடுருவச் செய்யும் அற்புதம் திரையில் நிகழ்கிறது. கல்வியில் 'செயல்முறைக் கல்வி' போல. ஒரு திரைப்படத்தில் எல்லா அம்சங்களும் சிறப்பாக இருக்கும்,ஒரு திரைப்படத்தில் குறிப்பிட்ட விஷயம் மட்டுமே பிரதானமாக கையாளப்பட்டு மற்றவை பின்தள்ளப்படும். கதையின் தன்மையைப் பொறுத்து அதை ரசிக்கவும் விமர்சிக்கவும் செய்வது அழகு. வியாபார நோக்கம் கருதி சமீபத்திய திரைப்படங்கள் சமூகக் கருத்தை மையப்படுத்தி கமர்ஷியல் சேர்த்து வெளிவருகின்றன(முழு பொழுதுபோக்கு படங்கள் பற்றி இங்கு சொல்லவில்லை. அதற்கான தேவையுமில்லை). விஷயம் யாதெனில், கதையிலும்,திரைக்கதையிலும், தான் சொல்லவந்த விஷயத்தை பிரதானமாக்கி சில மணி நேரங்களுக்கு ரசிகனைக் கட்டிப் போடுவதே இயக்குநருக்கான சவால். கற்றது தமிழ்,எவனோ ஒருவன் படங்கள் சிறந்த உதாரணம். இவ்விரு படங்களும் முன்னிறுத்தும் கேள்விகள் அபாரமானவை(இரண்டுமே வியாபாரரீதியில் தோல்வியடைந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). தனிமனிதனின் கேள்விகள்,கோபங்கள்,அவமானங்கள்,
சந்தோஷங்கள்,கட்டாயமாக உலகிற்கு உணர்த்தப்பட வேண்டியவை. ஏனெனில்,இந்த உணர்ச்சிகளின் கலவைதான் சமூகம்.சில நல்ல கதைகள் கமர்ஷியலாக படமாக்கப்பட்டு தன் சுயத்தை இழந்து விடுகின்றன. 'நிமிர்ந்து நில்' திரைப்படம் இந்த வகையைச் சார்ந்தது.தன் சமூகக் கோபங்களை உரக்கச் சொன்ன இயக்குநர் அந்தப் படத்தை இடைவேளையோடு முடித்து மிச்சத்தைக் கத்தரித்து குப்பையில் போட்டிருந்தால் சிறப்பாக வந்திருக்கும்.
'தனிஒருவன்' ஒரு வகையில் சிறப்பாக வந்திருக்கும் திரைப்படம். கதையின் பின்புலம் வலுவானது. நன்மை-தீமை இடையிலான போராட்டம் தான் படம். Batman-joker போல. ஒருவன் சிறு வயதில் செய்தித்தாளில் 15 வயது சிறுவன் செய்த கொலை செய்தி பார்த்து யோசிக்கத் துவங்குகிறான். அது அவனை காவல் அதிகாரி ஆக்குகிறது. குற்றங்களுக்கு பின்னால் உள்ள அரசியலை ஆராய்கிறான். அது ஒரு நெடுஞ்சங்கிலி போல நீள்கிறது. பெரிய குற்றங்களின் ஆணிவேர் சிறுகுற்றங்கள் என்பதை கண்டடைகிறான். ஒட்டுமொத்த குற்றங்களையும் ஒரு சிலந்திவலை பின்னலாகக் கொண்டு ஆராயும்போது சிலந்தியாக அந்த 15 வயது சிறுவன் உருவெடுத்து நிற்கிறான். தன் எதிரியை சந்திப்போம் என்று ஆணித்தனமாக நம்புகிறான்.இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். நல்லவன் அவனது கொள்கையிலும் கெட்டவன் அவனது கொள்கையிலும் தெளிவாக இருக்கிறார்கள்.கடவுளையும் பிசாசையும் போல இரு மனிதர்களின் சிந்தனைகள் விவாதங்களாகின்றன. இறுதிக்காட்சியில், தான் தோல்வியின் விளிம்பில் இருக்கும் போதும் அவன் கொள்கையில் திடமாக இருக்கும் கெட்டவன் இந்த 'நாட்டுக்காக' அல்ல 'உனக்காக' இதை ஏற்கிறேன் என்கிறான்.இதன் உட்கருத்து விஸ்தீரணமானது. இந்தக் கதையை விமர்சிக்கும் போது தனிஒருவன்(நல்லவன்) எப்படி இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடியும்? அரசு இயந்திரத்தில் இருந்து தப்பிப் பிழைத்து உயிரனமாய் நடமாட முடியும்? நான்கு நண்பர்களை மட்டும் வைத்துக் கொண்டு போராட முடியும்? தனிஒருவன்(கெட்டவன்) எப்படி ஒட்டுமொத்த நகரத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? எப்படி அரசியல் முடிவுகள் கூட அவனைக் கடந்துதான் செல்ல முடியும்? போன்ற கேள்விகள் அநாவசியமானவை. அவசியமில்லாதவை.

No comments:
Post a Comment