" ஹலோ
"
" யெஸ்."
" ஒய் யூ ஆர் நாட் கீப்பிங் யுவர் ஃபோட்டோ அஸ் டிபி இன் வாட்ஸ் அப்? ஃபேன்ஸ் ப்ராப் க்கு பயந்தா ? "
" அப்படில்லாம்
இல்ல...நாட் இன்டெரெஸ்டெட்."
" ஐ அம்
டெடிகேட்டிங் திஸ் காட் ஃபார் யூ."
"அனுமானா?"
" யெஸ்."
" அவ்ளோ
உத்தமன்லாம் இங்க எவனும் இல்ல. எனக்கெல்லாம் கிருஷ்ணன் மைன்ட் பொண்ணுங்க
விஷயத்துல..என்ன..இம்ப்ளிமென்ட் பண்ணத்தெரியல ."
" கிருஷ்ணன்
மைன்ட்டா இருந்தாலும்... மேரேஜ் கஷ்டம்."
" கிருஷ்ணன்
எல்லாரையும் கல்யாணம்லாம் பண்ணலையே..."
" ஹலோ,
கிருஷ்ணனுக்கு 16,008 பொண்டாட்டிங்க.
உங்களுக்கு ஒன்னுக்கே வக்கில்ல. கிருஷ்ணனப்
பத்தித் தெரியாம சும்மா ஒளறாதிங்க.“
" ஓ "
" யூ ஆர்
நாட் இன் ஃபேஸ் புக் ?"
" டீ
ஆக்டிவேட் பண்ணிட்டேன்."
" ஒய், ஃபேன்ஸ் ப்ராப் ?"
" ஆமா . என்ன ஸ்டேட்டஸ் போட்டாலும் திட்றதுக்குனே உன்னப் போல சிலபேர் இருக்காங்க...அதான்."
" ஆமா . என்ன ஸ்டேட்டஸ் போட்டாலும் திட்றதுக்குனே உன்னப் போல சிலபேர் இருக்காங்க...அதான்."
" ஓ "
" டீசன்ட்டா, ஹுமரா இருந்தாத்தான் மக்கள் ரசிக்கிறாங்க. உண்மையா ஓப்பனா பேசுனா குதிக்கிறாங்க. அதுவும் இல்லன்னா நாட்ல இருக்க எல்லாப் பிரச்சனையையும் கிண்டல் கேலி பண்ணி அந்தத் தீவிரம் புரியாம மாத்தி மாத்தி நீயா நானான்னு போட்டி போட்டு சண்டை போட்டுக்கிட்டு இன்னொரு பிரச்சனை கெடச்சா அத நோக்கி ஓடறாங்க. இப்ப இருக்க சூழல்ல எல்லாருக்கும் ஒரு பரபரப்பு தேவப்பட்டுட்டே இருக்கு."
"புரியல. டீசன்ட்டாத்தான் சோசியல் மீடியால ஸ்டேட்டஸ் போடணும். அப்புறம் எப்படி ஸ்டேட்டஸ் போட முடியும் ?"
"புரியல. டீசன்ட்டாத்தான் சோசியல் மீடியால ஸ்டேட்டஸ் போடணும். அப்புறம் எப்படி ஸ்டேட்டஸ் போட முடியும் ?"
" ஒரு சிம்பிள் எக்ஸ்சாம்பிள் சொல்றேன். 'பூட்டாத பூட்டுக்கள்'னு ஒரு படத்துல ஒரு வசனம் வரும். 'பொம்பள தப்பு செய்யனும்னு நெனச்சுட்டா புருஷனுக்கு ஆயிரம் கண்ணு இருந்தாலும் துரோகம் பண்ணுவா' அப்படின்னு. இத நான் இப்ப ஃபேஸ்
புக்ல போட்றேன்னு வச்சுக்கோ, ஒரு ஹெல்த்தி டிஸ்கஷன் அங்க
இருக்காது. பெரும்பாலும் அபியூசிங் தான் இருக்கும். அது எனக்குப் பிடிக்கல."
" நான் என்னக்
கேக்குறேன்...எதுக்கு ரிலேஷன்ஷிப் பத்தி மட்டும் பேசனும்? உலகத்துல
இது மட்டும்தான் பிரச்சனையா ? யாரோட பர்சனல்குள்ளயும் நாம போக முடியாது "
"பேசப்படாத
சிக்கல்கள் இங்க நெறய இருக்கு. அதப் பேசனும் இல்லயா ?"
" பேசனும்.
அதே நேரத்துல பொதுவா அந்த வசனத்தைப் பத்திக் கருத்து சொல்லவே முடியாது. இருக்கலாம்,
நடக்கலாம்னு அனுமானிக்கத்தான் முடியும். என் கேள்வி, படத்த படமாப் பாத்துட்டு விடாம ஏன் மண்டைக்குக் கொண்டு போகனும் ?"
" பொதுவாப்
பொண்ணுங்கள எல்லா உணர்வுகளும் கொண்ட ரத்தமும் சதையுமான சக
உயிரா பாக்காம ஒரு குடும்பத்தோட கௌரவமா, குடும்பக்
குத்துவிளக்கா, குடும்பத்துக்காகவே உழைச்சுக் கொட்டுறவளா
புனிதப் படுத்தி வச்சுருக்கே இந்தச் சமூகம்...அதையெல்லாம்
அப்படியேதான ஏத்துக்கிட்டீங்க? நடைமுறைக்கு முரணா ஒன்னு
சொன்னாமட்டும் ஏன் மறுக்குறீங்க ?
ஒவ்வொருத்தருக்கு
ஒரு மீடியம். சிலருக்கு சினிமா, சிலருக்குப்
புத்தகம், சிலருக்குச் சொந்த அனுபவம்.
எப்படி இருந்தாலும் சொல்லப்படற தகவல் ஒன்னுதான்.
என்னைப் பொறுத்தவரை, 'எ குட் மூவி இஸ் நாட் ஜஸ்ட் எ மூவி அட் ஆல்'."
" குத்துவிளக்கு
அது இதுனு சொல்லி கேர்ள்ஸ சப்ரஸ் பண்ணுறாங்க. ஒரே
விஷயம்..பொண்ணுங்களத் தாண்டி எவ்வளவோ ப்ராப்ளம் இருக்கு..ஹாசினி மர்டர், ஆர்.கே நகர் எலெக்ஷ்ன், நீட்
னு சொல்லிட்டே போகலாம். ஒய் டோன்ட் யூ ஸ்பீக் அபௌட் தட் ?"
" உனக்கே
தெரியுது சப்ரஸ் பண்ணுறாங்கனு. அது மாறிடுச்சுனு நீ சொன்னா அது பொய். இப்ப உள்ள
ஜெனெரேஷன் வேற வேற பேர்ல அதையேதான் பண்ணுறாங்க. ஆர்.கே. நகர் எலெக்ஷ்ன்
பத்தித்தான் டெய்லி பாக்குறோமே. எல்லாருக்குமே தெரியுமே அங்க நடக்குற
கூத்தெல்லாம். ஹாசினி கேஸ், பொண்ணு சம்மந்தமானது இல்லையா ?"
"பட் ஹாசினி
கேஸ் வியூவ் இஸ் டிஃபரென்ட் "
" ஹலோ,
ஹாசினி கேஸ் ஒரு ப்ரூட்டல் ரேப் அன்ட் மர்டர். அது ஏன் நடந்தது எப்படி
தடுக்குறதுங்கிறதுக்கு நீ செக்ஸ் பத்திப் பேசனும், குழந்தை
வளர்ப்பு
பத்திப் பேசனும், செக்ஸ் எஜுகேஷன் எவ்ளோ வீக்கா இருக்குனு பேசனும்..இன்னும் நெறய "
"அவன் ஒரு
ட்ரக் அடிக்ட்...தட் இஸ் தி பிக் ப்ராப்ளம்."
" நிர்பயாவ
பஸ்ல கொன்னவன்லாம் ட்ரக் அடிக்ட்டா? நீ நிர்பயா டாக்குமெண்ட்ரி
பாரு..அந்த மர்டரர் ஜஸ்டிஃபை ஹிஸ் மர்டர் அன்ட் தி லாயர் ஆஸ்கிங்
ஒய் தட் கேர்ள் இஸ் ரோமிங் அட் நைட் இன்ஸ்டெட் ஆஃப் ஆஸ்கிங் ஒய் தட் ஃபக்கர் கில்ட் ஹெர் ?"
" நான் ரோட்ல எவனாச்சும் சீண்டினா
அவன்ட சண்ட போட்டா எங்க வீட்ல என்னதான் திட்டுவாங்க.
அவங்க என்ன ப்ரொட்டெக்ட் பண்ணத்தான் பாப்பாங்க. ஏன்னா நம்ம சொசைட்டி அப்டி
இருக்கு."
"ப்ரொட்டெக்ஷ்ன், சேஃப்டிலாம் வெளிப்பூச்சு. பொண்ணு சாகறவரைக்கும் அவ
உடம்பப் பாத்துக்கறதே வாழ்க்கையா வச்சுக்கறா..அப்படி பழக்கிருக்கு நம்ம சமூகம்.
இந்தச் சமூகம் சொல்லித் தந்த சோ கால்டு கௌரவம், கற்பு பொதுவா பொண்ணோட உடம்பச் சுத்திக் கட்டமைக்கப்பட்டுருக்கு. ஏன் ஆண் சார்ந்து எதுவும் சொல்லப்படறது இல்ல. எல்லாரோட பொது புத்தியிலயும்
தெரிஞ்சோ தெரியாமலோ இந்தக் கறை படிஞ்சுப்
போயிருக்கு. பொண்ணோட உடம்பப் பாதுகாக்கப் புனிதம்,
ஒழுக்கம், தூய்மை, மரியாதை,
அது இதுனு வேற வேற பேர் வச்சுக்குறாங்க. முரண்பாடு என்னன்னா இந்தச்
சொற்கள் சொல்ல வர பொருள் மனச் சுத்தமும் அதன் வழி வரும்
நல்வாழ்வும்தான். தி ஐரனி இஸ் ஆல் அபவ் வார்ட்ஸ் ஆர் ராங்லி கன்சிவ்ட் பை
பீப்பிள் டூ ப்ரொட்டெக்ட் ஃபக்கிங் ஃபிளஷ்."
" வாட்டவர்...மே பீ தட் இஸ் தி யூனிவெர்சல் ட்ருத் ஃபார் லேடீஸ்."
" இந்தச் சமூகத்துல பாலியல் வறட்சி அதிகமா இருக்குனு ஒரு
பேட்டில இயக்குநர் ராம் சொன்னது அப்பட்டமான உண்மை. ஒரு ஆணா நானும் பொண்ணப் பொண்ணா
பல நேரங்கள்ல பாக்கறது இல்ல. அடிக்கடி சபலம் தட்டும். இது இருபாலுக்கும்
பொதுவாதான் இருக்கும்னு நெனைக்கிறேன்."
" நம்ம யாருமே ஒழுங்கா இல்ல...கருத்து சொல்ல...தட்ஸ் இட்.
நம்மளையும் நம்மள சுத்தி உள்ளவங்களையும் நல்லா பாத்துக்கிட்டு வாழ வேண்டியதுதான். நீங்கப் பேசலாம்..ஆனா உங்களால ஒரு துரும்பக் கூடக் கிள்ளிப்போட முடியாது. முதல்ல நீங்க மாற முயற்சிப்
பண்ணுங்க..பொண்ணுங்களத் தப்பாப் பாக்காம தவிர்க்கப் பாருங்க..அப்புறம் நாட்ட மாத்தலாம்..நாட்டோடப் பார்வைய மாத்தலாம்."
"மனுஷனால முழுசா ஒரு நெறியான,
தடுமாறாத, தப்பு செய்யாத வாழ்வு வாழவும்தான் முடியுமா?
மனுஷன் ஒரு முரண்பாடு மூட்டை. மனுஷன் சரியா
இருந்தாத்தான் பேசனும்னா இங்க யாருமே பேச முடியாது. மனுஷனோட உள்மன வெறி, கோபம், அழுக்கு, வக்கிரம்,
வெளிச்சம், இருட்டு, பாசம், காதல், அன்பு, அறம், அழுகை, குரோதம் இதெல்லாம் வெளில வெளிப்படுற அளவப் பொறுத்து நல்லவன் /நல்லவ , கெட்டவன்/கெட்டவ அப்படினு வகைப்படுத்தி
வச்சிருக்கோம். எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஏதோ ஒரு
விசயத்துல கோட்ட விட்டுருப்பாங்க. இங்க மனித செயல்களின், தவறுகளின்,குற்றங்களின் தாக்கம்
எந்த அளவுக்கு மத்தவங்கள பாதிக்குதுங்கிறதைப் பொறுத்துத்தான் நல்லது கெட்டது எல்லாமே."
" என்னமோ சொல்றிங்க...நீங்க சொன்னா உங்க நண்பர்களே கேக்க
மாட்டாங்க. இவ்வளவு ஏன் உங்கள உங்களாலேயே மாத்த முடியல. அப்புறம் எப்படி மத்தவங்க
கேப்பாங்க ?"
" அதுனாலதான் நான் எதும் சொல்றது இல்ல. நீ சொல்றாப்ல நானே
சரியில்ல."
"சிம்பிள்...வாட்டவர் வீ ஆர் டாக்கிங் இஸ் யூஸ்லெஸ்."
" அப்ப பேசவே வேண்டாம்னு சொல்லுறியா?"
" நீங்கப் பேசலாம்...எதையுமே உங்களால மாத்த முடியாது. இந்த
வெட்டிப் பேச்சு பேசி என்னாகப் போகுது ? யோசிங்க "
" என்ன யோசிக்கனும்? ஏழு வயசு
ஹாசினிய செதச்சு, எரிச்சுக் கொன்னது ; ஜல்லிக்கட்டுப்
போராட்டச் சமயத்துல அரியலூர்ல ஒரு 17 வயசு தலித் பொண்ணக் கர்ப்பமாக்கி, அவ கல்யாணம் பண்ணிக்கச் சொன்ன ஒரே காரணத்துக்காக அவள சின்னாபின்னமாக்கி ஒன்னரை மாசக் கருவ அவ பிறப்புறுப்புல கைய விட்டு உருவி எடுத்து அத
எரிச்சுட்டு அவள கிணத்துல தூக்கி வீசுனது ; எவனோ சோசியல் மீடியால வினுப்பிரியா போட்ருந்த ஃபோட்டோவ மார்ஃபிங் பண்ணி ஸ்கேன்டல் வீடியோ ரிலீஸ் பண்ணதுக்கு, அவளைப்
பெத்தவங்களே அவள நம்பலைன்னு அவ தற்கொலை பண்ணிக்கிட்டது ; விழுப்புரத்துல யோகா காலேஜ்ல பணம் அதிகமா
வாங்கிறாங்கனு போராடுனவங்களக் கொன்னு கிணத்துல வீசுனாங்களா இல்ல மூணு
பொண்ணுங்களும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களானு தெரியறதுக்கு முன்னாடியே ஆளாளுக்கு
ஏதேதோ பேசுனது ; டெல்லில ஓடற பஸ்ல ஒரு பொண்ண நாசம் பண்ணதுனு
பொண்ணுங்க உடம்பு மேல எவ்வளவு வன்முறை நடந்துக்கிட்டு இருக்கு. மீடியாலாம் அந்த
செய்திய ஏன் சொல்லனும் ? ஏன் விவாதிக்கனும் ? ஏதாவது மாறும்னு ஒரு நம்பிக்கைலதானே ?"
" சரிதான். எல்லாருக்கும் கோவம் இருக்கு...பட் யாருனா சண்டை போட போனா அவங்க குடும்பம் நடுத்தெருவுல நிக்குமேன்னுதான் எல்லாம்
பொறுமையா போறாங்க. என்னதான் கத்துனாலும் பேச்சு செயலாகுற வரைக்கும் ஒரு
பிரயோஜனமும் இல்ல. "
" எனக்கு இதெல்லாம் சரியாக்கறதுக்கான வழி என்னன்னே தெரியல.
ஆண்கள் இப்படித்தான், பெண்கள் இப்படித்தான், ஆண் புத்தி பெண் புத்தி அது இதுனு ஏதோ ஒரு வரையறை வச்சுக்கிட்டுத்தான்
ஒருத்தர் இன்னொருத்தர அனுகுறோம். ஆம்பளைங்கனாலே
எப்பவும் ஒரு அச்சத்தோடயும் சந்தேகத்தோடயும் நம்பிக்கையில்லாமயும் பொண்ணுங்க
பாக்குற சூழல் இங்க இருக்கறதா எனக்குத் தோனுது. ஆனா அதே பொண்ணு கல்யாணமான பிறகு,
உடல் மனம் சார்ந்து எதெல்லாம் தப்புன்னு அவளுக்குச் சொல்லிக்
கொடுக்கப்பட்டதோ, எதெல்லாம் ஆண்களிடமிருந்து
அவள விலகி நிக்க வச்சதோ அதையெல்லாம் அதே ஆண் அவள் கேட்காமலேயே உணர்த்தாமலேயே அவனா புரிஞ்சு நடந்துக்கனும்னு எதிர்பாக்குறா . இது எப்பேர்ப்பட்ட முரண் ?!
ஆண் இப்படி இருக்கதுக்கு காரணமும் இந்தச் சமூகம்தான். பெண்ணை இப்படி
ஆக்கி வச்சதும் இந்தச் சமூகம்தான். உடலால் வேறுபட்ட
மனதால் பொதுவான இருபாலினருக்கிடையே சரியான
புரிதல் இல்லாததாலேயே இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ ?
" எல்லா ஆம்பளைங்களையுமே தப்பா நெனைக்க மாட்டாங்க. ஒரு
பொண்ணோட கண்ணப் பாத்துப் பேசனும்..எப்போ பயந்து கண்ணப் பாத்துப் பேச
மாட்றாங்களோ..அப்ப எங்களுக்குத் தெரியும். அதே மாதிரி நாங்கக் கேக்காமலேயே
செய்யனும்னு இல்ல..ரெண்டு பேரும் பேசிப் புரிஞ்சுக்கனும். இது எளிமையானத் தீர்வு.
ஏன் நீங்க இவ்ளோ காம்ப்ளிகேட் பண்ணுறீங்க ?"
" ஒரு நீயா நானா ஷோல பொண்ணுங்க, கண்ணப்
பாத்துப் பேசுற பசங்கள ரொம்பப் பிடிக்கும்னு சொல்லுவாங்க. யாரெல்லாம் பொண்ணு
கண்ணப் பாத்துப் பேசுவீங்கன்னு கேக்கும்போது எதிர்தரப்புல
ரொம்பக் கம்மியா கை தூக்குவாங்க. அப்ப ஒரு பையன், 'பொண்ணு
கண்ணப் பாத்துப் பேசுறவங்க நடிக்கிறாங்க, அவ்ளோ ஈஸியா ஒரு
பையனால அதப் பண்ணமுடியாது. சுத்தி இருக்குற மரம், செடி,
கொடின்னு எங்கங்கேயோதான் பாத்துட்டுப் பேசுவான்'னு அழகா சொல்லுவான். நிஜமாவே ஒரு நல்ல
ஆண்மகன் பொண்ணு கண்ணப் பாத்து அவ்ளோ சீக்கிரம் பேச மாட்டான், பேசவும் முடியாது."
" பாக்கலாம்...கண்ணப் பாத்துப் பேசுறாப்ல நடிக்கல்லாம்
முடியாது. இதெல்லாம் சுத்தப் பேத்தல்."
"ஐ அம் டேம் ஸுர் இட் இஸ் ஈசி டு ஸ்பீக் பை சீயிங்
கேர்ள்ஸ் ஐஸ்...அத வச்சு ஹி இஸ் குட் னு நீங்க நெனச்சா...ஐ அம் ஸாரி."
" ஓ "
"இன்னைக்கு எவ்ளோ விவாகரத்து நடக்குது. என்னதான் வெளில
ஆயிரம் காரணம் சொன்னாலும் எனக்குத் தெரிஞ்சு மூணு காரணம்தான்
இருக்க முடியும். குழந்தையின்மை, செக்ஸ் தேவை, விருப்பங்களில் முற்றிலும் முரண்பட்டு புரிதலில்லாமல் இருத்தல்."
" யுவர் அசம்ஷன் இஸ் ஆல்வேஸ் ராங். ஒன் மெயின் திங் யூ மிஸ்டு..ஈகோ."
" ஈகோனால விவாகரத்தெல்லாம் சும்மா. நான்தான்
சொல்றேன்ல..இங்க ஓப்பனா யாரும் எதையும் சொல்லமாட்டாங்க. உளவியல் சிக்கல்கள பொதுவெளியில
விவாதிக்கற வரைக்கும்
ஒரு அடி
கூட முன்னாடி
போகமுடியாது."
" ஈகோனால மட்டும்தான் டிவோர்ஸ்...மேரேஜ் ஆனா
புரியும்."
" ஓ "
"ஐ வில் கிவ் யூ ஒன் அட்வைஸ்...டோன்ட் டேக் தி திங்ஸ் விச் யூ ஆர் ரீடிங் ஃப்ரம்
தி புக் அன்ட் சீயிங் இன் சினிமா இன் டு யுவர் லைஃப்...தட்ஸ்
பெட்டர் ஃபார் யுவர் பியூச்சர்
லைஃப்."
" நான் பேசுறதெல்லாம் உனக்கு பயமா இருக்குல்ல?"
"இல்ல...இப்படிப் பேசிட்டே இருந்தா எவனும் பொண்ணு
தரமாட்டான். எங்கேயோ படிக்கிறது, பாக்குறது, கேக்குறது வச்சுப் பேசிட்டு இருக்கீங்க. எவரிதிங் இஸ்
அசம்ஷன்..யுவர் பாசுலேட்ஸ் ஆர் ரிஜெக்ட்டட்..ட்ரை பிராக்ட்டிக்கல்லி அன்ட் கிவ் யுவர் சஜஷன்ஸ். ஓகே. டில் யு ஹாவ் எக்ஸ்பீரியன்ஸ் யு ஷுட் நாட் கமென்ட் ஆன் எனிதிங் "
" இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல...எல்லாத்தையும்
எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிட்டுத்தான் பேசனும்னா நான் சாகுற காலத்துலதான் பேசனும். இந்த
வாதமே அபத்தம்."
" எது
அபத்தம்? நீங்க மென்டல்னு எல்லாரும் சொல்றாங்கன்னு
உங்கக்கிட்ட பேசாமப் பழகாம நான் ஜட்ஜ் பண்ணா வில் யூ அக்சப்ட் தட் ? பாக்கறது, கேட்கறது வச்செல்லாம் எதையும் முடிவு பண்ண
முடியாது."
" இதுக்கு நான் பதில் சொல்ல ஆரம்பிச்சா போயிட்டே இருக்கும். தீர விசாரிக்குறது, ஆராயரதுன்னா
என்ன ? எங்கேயோ எப்பவோ எழுதப்பட்ட வரலாறுகளோ; வழியா வழியா
நமக்குக் கடத்தப்பட்டச் செய்திகளோ; ஒருவரின் சுய
அனுபவங்களோ; திட்டமிட்டு இட்டுக்கட்டி எழுதப்பட்டப் புனைக்கதைகளோ; தனித் தனியாவோ, எல்லாம் கலந்து உருண்டு திரண்டு ஒரு
திரட்சியான வடிவமாவோ தலைமுறை தலைமுறையா
கடத்தப்படுது. அதுதான் சரின்னும் நம்பப்படுது. அதுக்கு எதிர்வினை உள்ளவங்க ஒரு
தரவோட வருவாங்க, இதுதான் சரின்னு மல்லுக்கட்டிக்கிட்டு வழி
வழியா வந்தத மாத்த விரும்பாதவங்க இன்னொரு தரவோட வருவாங்க. கட்டக்கடைசியா எது சரினு
உன் உள் மனசு சொல்லுதோ அத நம்ப வேண்டியதுதான். வேற வழி இல்ல."
" என்னதான் நீங்க சொன்னாலும் மேலாப்ல எதையும் சொல்லவோ, ஏத்துக்கவோ முடியாது. அனுமானமாவே இருந்தாலும்
அதுக்கும் அனுபவம் வேணும்."
" வாஸ்தவம்தான். நான் பாத்தது, புரிஞ்சது,
இதுவரைக்குமான அனுபவம் வச்சு என் ஒப்பீனியன் சொல்றேன். இட் மைட் பி ராங், பட், நான் சொல்லக்கூடாதுனு நீ சொல்லமுடியாது இல்லையா ? கல்யாணம்
பண்ணாத்தான் கல்யாண வாழ்க்கை பத்தியே பேசனும்னா எப்படி? தப்புன்னா
மாத்திக்கப் போறேன். நான் நெனச்சதுதான் சரின்னு கத்தப் போறதில்லையே."
" உங்க வழிக்கே வரேன். ஓரளவுக்குப் புரிதலோடவே ஆணும் பொண்ணும் பேசுறதாவே வச்சுக்கங்க. வில் யூ
கெட் அன்சர்ஸ் பார் எவரி ப்ராப்ளம் வீ ஆர் ஃபேசிங் ரைட் நவ் ? "
" அன்சர்ஸ்லாம் கெடைக்காது. அசம்ஷன்தான் கெடைக்கும். அதும்
இல்லனா அவங்கவங்களுக்கானத் தனிப்பட்டப் புரிதல்தான் இருக்கும்...கல்யாணம் பண்ணி,
கூடசேர்ந்து வாழ்ந்து காதலோ புரிதலோ இல்லாம செத்துப் போயிருக்காங்க. குழந்தைங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கி
விட்டு அப்புறமா நாற்பது, ஐம்பது வயசுல டிவோர்ஸ்
பண்ணுறாங்க. பேசுனா இதெல்லாம் கடல்."
"தட்ஸ் இட். அண்டர்ஸ்டாண்டிங் இருக்குன்னு நம்புனா
வாழ்க்கை நல்லாருக்கும். அதுக்கு நம்பனும். எதையும் ஓவரா யோசிச்சா இப்படித்தான்.
வாழ்க்கைய சிம்பிளா பாருங்க. அது உங்கள அள்ளி அணைச்சுக்கும். ஓகே "
" கடைசில நான் ஒன்னும் தெரியாத
யூஸ்லெஸ் ஃபெலோனு சொல்லாம சொல்ற."
"இல்ல. எல்லாமே ஓவரா இருக்கு, அதான்
ப்ராப்ளம் . வேலை வெட்டி இல்லாதவங்கதான் இப்படியெல்லாம்
யோசிச்சு நேரத்த விரயம் பண்ணுவாங்க.எனக்கு வேலை
இருக்கு. உங்கள மாதிரி வெட்டி கெடையாது நான்."
"ஹலோ…...!!!"
என்ன?! போய் பொழப்பப் பாருங்க.
No comments:
Post a Comment